2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'யானைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துங்கள்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

சேருவிலவின் அல்லைக்காட்டுப் பகுதியின் எல்லைக் கிராமங்களில், யானைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துங்கள் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மூதூர் தெற்குப் பிரதேச கிராமங்களுக்கான காட்டு யானைகளின் நுழைவாயிலாக இந்தக் கிராமங்கள் கருதப்படுகின்றன.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கங்குவேலி, புளியடிச்சோலை கிராமங்களைச் சேர்ந்த கிராமிய அமைப்புக்களான, ஆலய சபைகள், கிராம மாதர் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள், மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், விவசாய அமைப்புக்கள் என, பெரும் திரளான மக்கள் பிரதிநிதிகள் கங்குவேலி தங்கத்துரை கலாசார மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை (25) மாலை கூடினர்.

இதன்போது இப்பிரதேசத்தில் உள்ள முக்கியமான பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என பல்வேறு திணைக்களங்களுக்கும் மகஜர்களை அனுப்பத்

தீர்மானம் எடுக்கப்பட்டது.

அண்மைக்காலமாக, மூதூர் தெற்குப் பிரிவு கிராமங்களில் தொடர்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எமது கிராமங்கள், சேருவிலவின் அல்லைக் காட்டுப்பகுதியின் எல்லைக் கிராமங்களாகவுள்ளன.

இதனூடாகவே காட்டு யானைகள், கிளிவெட்டி, முன்னொம்போடிவெட்டை, நாராயணபுரம், மேன்கமம் உள்ளிட்ட பல  கிராமங்களுக்குள் தினமும் சென்று வருகின்றன.

எனவே, முதலில் எமது கிராமத்தினூடாக செல்லும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள குளங்கள், சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயம் செய்யப்படுகின்றன. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்கள் பாதிக்கப்படுகின்றன.

குறித்த கங்கு வேலிக்குளம் உள்ளிட்ட குளங்களை புனரமைத்து அடாத்தக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .