Thipaan / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட பின் தங்கிய கஷ்டப் பிரதேச பாடசாலையான தோப்பூர் அல் அமான் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர், இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இவ்வருடம் வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இம்தியாஸ் அழ்பர் (174), எம்.எஸ்.சாக்கீர் (171), எம்.எம்.இல்லியாஸ் அஹமட் ஆகிய 3 மாணவர்கள் இன்று (13) ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பாடாசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பாடசாலை அதிபர் கே.எம்.றிஸ்மி, படிப்பித்த ஆசிரியர் ரீ.இம்தியாஸ் ஆகியோர் பாடசாலையின் பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதீதியாக தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஐப்பார் கலந்து சிறப்பித்தார்.

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026