Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் களம் இறங்கி இருக்கின்றேன். எனக்கு உங்களது பூரண ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் தெரிவித்தார்.
தோப்பூர் உதவி பிரதேச செயலாளர் செயலகத்தை தனிப் பிரதேச செயலகமா தரமுயர்த்துவது தொடர்பான சமூக மட்ட கலந்துரையாடல், நேற்று புதன்கிழமை இரவு, தோப்பூரில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நான் கடந்த பொதுத் தேர்தலின் போது தோப்பூர் பிரதேசத்துக்கு வருகை தந்து உங்களிடம் வாக்குக் கேட்ட போது, தோப்பூர் உதவி பிரதேச செயலாளர் செயலகத்தை தரமுயர்த்தி தனி பிரதேச செயலகமாக தரமுயர்த்தி தருவதற்கான முயற்சிகளை மேற் கொள்வேன். எனக்கு உங்களது மக்கள் ஆணையை தருமாறு கேட்டிருந்தேன்.அந்த வகையில் தோப்பூர் பிரதேச மக்கள் எனக்கு கணிசமான வாக்குகளை அளித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்ததை என்னால் மறக்க முடியாது.
தோப்பூர் பிரதேச மக்கள், 1985ஆம் ஆண்டிலிருந்து பிரதேச செயலகம் வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து வந்தனர். 2003ஆம் ஆண்டு உதவி பிரதேச செயலாளர் செயலகம் கிடைத்தது. இன்று உதவி பிரதேச செயலாளர் செயலகம் வந்து 13 வருடங்களாகியும் இன்னும் தரமுயர்த்தப்படாமல் உள்ளது. இதனை தரமுயர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
அத்தோடு, தோப்பூர் உதவி பிரதேச செயலாளர் செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தின்போது, பிரேரணை ஒன்றை கொண்டு உரையாற்ற உள்ளேன். அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.
6 minute ago
15 minute ago
27 minute ago
1 hours ago
A.Ayunoos (Thoppur) Friday, 22 January 2016 05:34 AM
வாக்குறுதியை நிறைவேற்றினால் சரி
Reply : 0 0
Ayunoos Friday, 22 January 2016 05:35 AM
வாக்குறுதியை நிறைவேற்றினால் சரி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
27 minute ago
1 hours ago