Thipaan / 2016 ஜூலை 04 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் வைத்தியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவரை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி. விஸ்வானந்த பெர்ணாண்டோ, இன்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.
திருகோணமலை பிரதேசத்தில் வைத்து, வைத்தியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருவர் தப்பித்துச் சென்றதாக, திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த மாதம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்தேக நபர்கள் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) அவர்களைக் கைதுசெய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
திருகோணமலை, விஜித்தபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் சமன்புர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
52 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
21 Mar 2026