2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாணத்திலுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளில் 10 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் 2013ஆம் ஆண்டு தனது அமைச்சின் அனுசரணையுடன் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தக முதலீட்டாளர்களின் உதவியுடன் மேற்படி தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக இதன்போது அவர் சுட்டிக் காட்டினார்.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையுடன் 'தனியார் துறை பங்களிப்புடன் தொழில் அபிவிருத்தி'; எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்று நேற்று சனிக்கிழமை திருகோணமலை வெல்கம்வே ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அமைச்சர் நஸீர் அஹமட் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்ளூ

'யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் வெளிநாட்டுஇ  உள்நாட்டு முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு முன்வந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசாங்கத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. எனவே, உள்நாட்டில் உள்ள வர்த்தக சம்மேளனங்கள்இ தனியார்துறை முலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் பங்கு கொள்வதற்கு முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறான திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், உதவுவதற்கும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தயாராக இருக்கின்றார்.

இந்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் உள்ள வர்த்தக சம்மேளனங்களை ஓர் அமைப்பின் கீழ் கொண்டுவந்து வழி நடாத்தி செல்லவுள்ளோம்.

இதனை உற்சாகப்படுத்தும் வகையில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ எமது அடுத்த செயலமர்வில் கலந்து கொண்டு எமக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளார்.

ஏனைய மாகாணங்களை விடயும் கிழக்கு மாகாணத்தை வளம்மிக்கதொரு மாகாணமாக மாற்றி, வேலையில்லாப் பிரச்சினையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்போது, இன ரீதியான பாகுபாடுகளை மறந்து திறமைசாலிகளை உற்சாகப்படுத்தும் ஒருவராக நான் இருப்பேன்' என்றார்.

அமைச்சின் செயலாளர் கே. ஸ்ரீபத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில்;, அமைச்சின் பணிப்பாளர் டொக்டர் ஆர் ஞானசேகர், தனியார்துறை அபிவிருத்தி ஆலோசகரும் அமைச்சரின் ஆலோசகருமான சமந்த அபயவிக்ரம, கிழக்கு மாகாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்கள்,   தனியார்துறை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .