2025 மே 10, சனிக்கிழமை

'பதவி உறுதிப்படுத்தல் வாரத்தில்' 1,000 கோரிக்கைகள் நிறைவேற்றல்

Super User   / 2013 ஜனவரி 13 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முறாசில்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட 'பதவி உறுதிப்படுத்தல் வாரத்தில்' சுமார் 1,000 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

இதன்போது, ஆயிரத்திற்கும்  அதிகமான அதிபர் மற்றும்  ஆசிரியர்களது பதவி உறுதிப்படுத்தல் கோவைகள் பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய கல்வி பணிப்பாளராக கடந்த முதலாம் திகதி கடமையேற்ற நிஸாம், அதிரடி நடவடிக்கையாக 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலான ஒருவாரத்தை பதவி உறுதிப்படுத்தல் வாரமாகப் பிரகடனப்படுத்தினார்.
இந்த வாரத்தில் நிலுவையாக இருந்த அனைத்துக் கோவைகளையும் பரிசீலித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ள  பதவி உறுதிப்படுத்தல் கடிதங்கள் அடுத்த வாரத்தில் பாடசாலை முகவரிக்கும்  சுய விபர கோவைக்கான பிரதிகள் 17 கல்வி வலயங்களுக்கும்  அனுப்பிவைக்கப்படவுள்ளன.  

இதேவேளை, பதவி உயர்வு மற்றும் சம்பள மாற்றியமைப்பு முதலான விடயங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மாகாண கல்வி பணிப்பாளரினால்  வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து  விபரங்கள்  கோரப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X