2025 மே 10, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் 37 பேருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  இந்திய மீனவர்கள்   37 பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் திருச்செல்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள்   37 பேரையும் கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை, புல்மோட்டை  கடல் பகுதிக்கு அப்பாலேயே  மேற்படி மீனவர்கள் 5 ரோலர் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர் அப்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுடைய படகுகளில் இருக்கின்ற மீன்களை விற்பனைசெய்து பணத்தை நீதிமன்ற கணக்கிற்கு வைப்பிலிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

கடும் காற்றின் காரணமாகவே தாம் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுத்துவரப்பட்டதாக இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X