Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Super User / 2010 நவம்பர் 03 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கிண்ணியா, கண்டல் காடு பகுதிக்கு மக்கள் மீண்டும் சென்று விவசாய நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடலாம் என திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை கிண்ணியா பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.
விவசாய நடவடிக்கையில் ஈடுபட அங்கு செல்வோர் எக்காராணம் கொண்டும் கொட்டில்கள் அமைக்க முடியாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கண்டல் காடு காணிப் பிரச்சினை தொடர்பாக இரு வாரங்களுக்கு ஒரு முறை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கண்டல் காடு பகுதி காணி உரிமையாளர்களிடம் உள்ள காணி உறுதியின் உறுதித் தன்மை தொடர்பாக ஆராய்வதற்கு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், மாகாண காணி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் அடங்கிய விசேட குழுவொன்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஹ்ரூப், பிரதேச செயலாளர் எம்.முபாரக், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், உலமா சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் கிண்ணியா கண்டல் காடு பகுதியில் மீள்க்குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்கள் தற்காலிக கொட்டில் அமைந்து தங்கியிருந்தனர். எனினும் கடந்த திங்கட்கிழமை அவர்களின் கொட்டில்கள் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago