Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 நவம்பர் 21 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
2011ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் முன்க்கப்படவுள்ளது.
தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ள வரவு செலவு திட்ட விவாதத்தில் ஆளுநருக்கான நிதியொதுக்கீடு, முதலமைச்சருக்கான நிதியொதுக்கீடு மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இம்முறைய வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் உத்தேச வருமானமாக 1726 கோடியே 753ஆயிரம் ரூபாவும் உத்தேச செலவாக 1349 கோடியே 27 லட்சத்து 53 ஆயிரம் ரூபாவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் மாகாண வீதி அபிவிருத்திக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 117 கோடி 50 லட்சமும் உலக அபிவிருத்தி வங்கி 86 கோடி 30 லட்சம் ரூபாவும் வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெய்கா திட்டத்தின் ஊடாக கிராம வீதி அபிவிருத்திக்காக 149 கோடி ரூபாவும்நீர் வழங்கல் திட்டத்திற்காக 24 கோடி ரூபாவும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபையின் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago