2025 மே 15, வியாழக்கிழமை

சில தினங்களுக்கு மழை நீடிக்கும்

Super User   / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா, அதுல பண்டார, அமதொரு அமரஜீவ)

வடகிழக்கு பருவக்காற்று தொடர்ந்து தீவிரமாக காணப்படுவதால் இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்தது.

இதேவேளை வெள்ளத்தின் காரணமாக 210000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

4410 பேர் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து 16 முகாம்களில் வசிப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

102 வீடுகள் முழுமையாகவும் 423 வீடுகள் பாதியளவிலும் வெள்ளத்தின் காரணமாக சேதத்திற்குள்ளாகியிருப்பதுடன் இருவர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை வெள்ளத்தின் காரணமாக கிழக்கு பல்கழலைக்கழகத்தின் திருகோணமலையில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு மற்றும் வியாபார முகாமைத்துவ பீடமும் நீரில் மூழ்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .