2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 18 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சினால் இன்று திங்கள் கிழமை மாலை விதை நெல் வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஒன்று கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் திரு.துரையப்பா நவரட்னராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு விதை நெல்லை வழங்கி வைத்தார்.
கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவருக்கு நட்டஈடாக ஏக்கர் ஒன்றிக்கு 2 பூசல் வீதம் 2 ஏக்கருக்கு மட்டுமே வழங்க வழங்கப்படவுள்ளன.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கான மௌலவி எஸ்.எல்.எம்.ஹஸன், எம்.ஏ.எம்.மஹ்ரூப், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.ஹூஸைன், கிண்ணியா பிரதேச உதவிச் செயலாளர் எஸ்.கிருணேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X