2025 மே 03, சனிக்கிழமை

திருமலையில் 'சகோதர லங்கா' தொழில் வாண்மை கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் எதிர்கால தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதை அடிப்படையாக கொண்ட 'சகோதர லங்கா' என்ற தொழில் வாண்மை கருத்தரங்கொன்று திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதனை மொறட்டுவை றொட்டறிக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

தொழில் சார் வழிகாட்டலை வழங்கி உரிய பயிற்சிகளை, தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு வழங்கி, பின்னர் பொருத்தமான நிறுவனங்களில் நிரந்தர தொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் சகோதர லங்கா என்ற இவ்விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அக்கழகத்தின் செயற்திட்ட முகாமையாளர் நிபுண கூறினார்.

இக்கருத்தரங்கில் திருகோணமலையை சேர்ந்த 80 விண்ணப்பதாரிகள் கலந்து கொண்டதுடன் திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளர் கே.விஜேந்திரன் மற்றும் றொட்டரி கழகத்தின் திருகோணமலை கிளைத் தலைவர் அ.கிருபாகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்த கொண்டனர்.

கருத்தரங்கின் இறுதியில் நடைபெற்ற தனிப்பட்ட நேர்முகப்ப்பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடவசதியுடன் கூடிய முழுநேரப் பயிற்சிகள் பிரதான தனியார் தொழில்துறை நிறுவனங்களில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X