2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மூதூரில் தந்தை-தனயன் சாகசம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)

திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூதூர் பிரதேசத்துக்கான வருடாந்த இளைஞர்
விளையாட்டு விழா நேற்று முன்தினம் மூதூர் பொது மைதானத்தில்  நடைபெற்றது.

இதன்போது, மூதூர் பிரதேசத்தை சேர்ந்த முகம்மது சாலிஹூ பஸ்ரி மற்றும் அவரது 14 வயது மகன் பஸ்ரி ஹஸனுல் பன்னா ஆகியோர் இணைந்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுப்பட்டனர்.

முகம்மது சாலிஹூ பஸ்ரி தனது கழுத்துக்கு மேலாக மோட்டார் சைக்கிளை ஏற்றியும் தனது கழுத்தில் 14 மில்லி 4 கம்பிகளை ஒன்றாக வைத்து வளைத்தும் காட்டினார்

இதேவேளை, அவரது மகன் 1000 கிலோகிராம் எடையுடைய வான் ஒன்றை தனக்கு மேலால் ஏற்றி பார்வையாளர்களை வியக்க வைத்தார்

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்னராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .