2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலையில் லவிங் ட்ரிங்கோ களியாட்ட நிகழ்வு

Super User   / 2012 மே 02 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கஜன்)

சுற்றுலா, பொருளாதார வர்த்தக  சம்மேளனத்துடன் இணைந்து,   பாரியளவிலான   கடற்கரை களியாட்ட நிகழ்வு ஒன்றினை திருகோணமலை கிறீன் கிளசிக் நிறுவனம் 5 தினங்களுக்கு நடத்தவுள்ளது.

'லவிங் ட்ரிங்கோ'  என்னும் பெயரில் ஜுன் மாதம் 4ஆம் திகதி தொடக்கம்  7ஆம் திகதி வரை  திருகோணமலை டச்சு விரிகுடா கடற்கரையை மையமாக  வைத்து  இக்களியாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் நீர் விளையாட்டுக்கள்,  கடற்கரை விளையாட்டுக்கள் என்பனவற்றுடன்  பியர் புங்கா, இரவு நேர கூத்தரங்குகள், கண்காட்சி கூடங்கள், அலங்கார காட்சிகள்,  உணவுவிடுதிகள்,  சுகாதார பரிசோதனை  நிலையங்கள்  என்பனவற்றுடன் கண்கவர் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

இது பற்றிய ஆலோசனைக்கூட்டம் திங்கட்கிழமை சினேக் வீதியில் உள்ள செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு  மாகாண  விவசாய கால்நடை மீன்படி  அமைச்சர் துரையப்பா நவரண்டராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள், கடற்படையினர் இராணுவத்தினர் விமானப்படை உயர் அதிகாரிகளும்ம் பொலிஸாரும் கலந்து கொண்டு , தமது ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .