2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலேரியா நோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

Suganthini Ratnam   / 2012 மே 04 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் மலேரியா நோய் தொடர்பில்  விழிப்புணர்வூட்டும் பேரணியொன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை துளிசிபுரத்திலுள்ள  மலேரியாத்தடை இயக்கத்திலிருந்து ஆரம்பித்த இப்பேரணி,     உப்புவெளி சர்வோதய அலுவலம் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து மலேரியா நோய்   தொடர்பிலும் அதனை முற்றாக ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட மலேரியா தடை இயக்கமும் சர்வோதய சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்த இப்பேரணியில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி ஞானகுணாலன்,   மலேரியா தடை இயக்க பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜமுனா,  திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் ரி.தவக்கொடிராசா சர்வோதயத்தின் மாகாண இணைப்பாளர் வி.ஜீவராஜ், மலேரியா மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.அருள்தாஸ் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .