2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திடீர் அனர்த்தங்களை கையாளும் வகையில் அறிவூட்டும் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2012 மே 17 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

இயற்கை அனர்த்தங்களான  சுனாமி, புயல,; பெருவெள்ளம் போன்றவற்றினால்; ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளை கையாளுவதற்காக பொதுமக்களுக்கு அறிவூட்டும் பயிற்சிநெறி திருகோணமலையில் கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பயிற்சிநெறி, திருகோணமலை நகரக் கடற்கரையிலும் எகெட் கரித்தாஸ்; நிலைய மண்டபத்திலும் நடைபெற்றது. 

திருகோணமலையின் கரையோரப் பிரதேசங்களான நிலாவெளி, வேலூர், இலுப்பைக்குளம், சிறிமாபுர பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 பொதுமக்கள் பங்குபற்றினர்.  இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி எம்.எ.முஜாகிர் கருத்துரைகளையும் செயன்முறை பயிற்சிகளையும் வழங்கினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .