2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஈச்சிலம்பற்று மருத்துவமனையில் அமைக்கப்பட்ட விடுதிகளை கையளிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 30 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளை, ஈச்சிலம்பற்று  மருத்துவமனையில் அமைக்கப்பட்ட மருத்துவருக்கான விடுதி ஒன்றினையும் மருத்துவ  உத்தியோகத்தர்களுக்கான 4 விடுதிகளையும் திறந்து வைத்து சுகாதார திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் இதனை அமைத்துக் கொடுத்துள்ளது.

கிழக்கு  மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பேர்னாட் சவஹே, கிழக்கு  மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X