2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதிக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 மே 31 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட், கஜன், ரமன்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், உதவித் தவிசாளருமான திருமதி ஆரியவதி கலப்பதியை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதன் காரணமாக இவர் மீது நீதிமன்றப் பதிவாளரால் துறைமுகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு இவ்வழக்க விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இச்சந்தேக நபர் சார்பாக பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பிரதான மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிவான் யு.எல்.எம்.அஸ்ஹர் இத்தீர்ப்பினை வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .