2025 மே 02, வெள்ளிக்கிழமை

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும்: கிழக்கு மாகாண சபையில் பிரேரணை

Super User   / 2012 ஜூன் 07 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

விடுதலை புலிகளினால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போது, மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் இப்பிரரேணை முன்வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற அரசாங்கம், அரச அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட அனைவரும் நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட இந்த பிரரேணை, அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • ashhar Friday, 08 June 2012 06:29 AM

    மிகவும் நல்ல நடவடிக்கை முசலி அஷ்ஹர்.

    Reply : 0       0

    koneswaransaro Friday, 08 June 2012 06:47 AM

    அமைச்சுப் பதவிகளை அலங்கரிப்பவர்கள், அரசின் பிரதி நிதியாகக் கிழக்கில் செயல்படுபவர்கள் பிரேரணை நிறைவேற்றினால் யாரிடம் அப்பிரேரணையை செயல்படுத்துமாறு கேட்கலாம்? மக்கள்தாம் பரிதாபத்துக்குரியர்வர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X