2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தலைமைத்துவ பயிற்சி முகாம்

Super User   / 2012 ஜூன் 10 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸினால் ஒழுங்கு செய்யப்பட்ட தலைமைத்துவ பயிற்சி முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் மூதூர் தாருல் ஜின்னாஹ் வித்தியாலயத்தில் இப்பயிற்சி முகாம் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி, கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.யூ. ராஸிக் பரீட், அரசியல் உயர் பீட உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஏ.ஜே.எம்.லாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தரும் அரசியல் துறை பேராசிரியருமான எம்.எல்.ஏ.காதர், தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜெஸீல் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். திருகோணமலை மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் இப்பயிற்சி முகாமில்  பங்குபற்றியிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X