2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிண்ணியா வீட்டிலிருந்து தாயினதும் மகளினதும் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்பு

Super User   / 2012 ஜூலை 10 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

கிண்ணியா ஆலங்கேணி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து  55 வயதான தாயொருவரிதும் அவரின் 21 வயதான மகளினதும் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் விஜேராணி மகேந்திரன் மற்றும் மகேந்திரன் ஜனனி ஆகிய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டவர்களாவர். இவர்களது மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த வீட்டின் இருவேறு இடங்களிலிருந்து இச்சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இது கொலையாக இருக்கலாம் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (படங்கள் - பரீட்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .