2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கங்குவேலி திருக்கரைமாநகரம் ஆதிசிவன் ஆலயத் தீர்த்தத் திருவிழாவையொட்டி சிரமதானப் பணி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


வரலாற்றுச் சிறப்புமிக்க  கங்குவேலி திருக்கரைமாநகரம் ஆதிசிவன் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழா, ஆடியமாவாசையின்போது  எதிர்வரும் 19ஆம் திகதி   காலை 7.10 மணிக்கு  நடைபெறவுள்ளதையொட்டி அப்பகுதியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கங்குவேலி ஆதிசிவன் ஆலயத்திலிருந்து பெருமான் காவடி சகிதம் பக்தர்களுடன்  அகத்திய முனிவர் புனித தீர்த்தமாடிய புனித வவுணாவில்  மகாவெலி கங்கை  கரைக்குச் செல்லவுள்ளார்.
இதனையொட்டி அடியார்கள் சிரமமின்றி  தீர்த்தக் கரைக்கு  சென்று வருவதற்கு வசதியாக பாதை சிரமதானம் மூலம் செப்பனிடப்படுகின்றது.

கங்குவேலி மக்கள் நேற்று சனிக்கிழமை   பரிபாலனசபையினரின் அழைப்பின் பேரில் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.  ஆற்றின் கிளையினூடாக பக்தர்கள் வாகனங்கள் சகிதம் செல்லத்தக்க வகையில்   ஆற்றுக்கிளையின் குறுக்காக  மணல் போட்டு பாதை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .