2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் தொடர்பிலான சட்ட ஒழுங்கு விதிகளை விளக்கும் கூட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 15 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பிலான சட்ட ஒழுங்கு விதிகளை விளக்கும் கூட்டம் இன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்கார தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இருந்து இம்முறை கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

தேர்தல் சட்டவிதிகளுக்கு ஏற்ப எவ்வாறு பிரசார நடவடிக்கைகளை வேட்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விசேடமாக இங்கு பொலிஸ் தரப்பினால் விளக்கமளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X