2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

றொபர்ட் ஓ பிளேக்கை சந்திக்கவுள்ளார் இரா.சம்பந்தன்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (சி.குருநாதன்)

இலங்கைக்கான விஜயத்தை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கை தான் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, சூரநகர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பூநகர், புன்னையடி, கூனித்தீவு ஆகிய பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.  இவற்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன்  திருகோணமலை மாவட்டத்தின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்னசிங்கம், வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • sivanathan Tuesday, 07 August 2012 03:53 PM

    கூனித்தீவு அரசாங்கத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. இங்கு இன்னமும் மக்கள் மீள் குடியமர்த்தப்படவில்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் இல்லாத இடத்தில் பரப்புரை செய்வார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .