2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பெகோ குடை சாய்ந்ததில் சாரதி பலி

Super User   / 2012 டிசெம்பர் 02 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

மூதூர், ஜபல் மலை பகுதியில் பெகோ ஊர்தி ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை குடை சாய்ந்ததில் வாகனத்தின் சாரதி பலியாகியுள்ளார்.இந்த சம்பவத்தில் பலியானவர் மூதூர் பெரிய பாலம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நூர்தீன் பரீஸ் (வயது 34) என்பவராவார்.

ஜபல் மலை பகுதியில் உடைக்கப்பட்ட கருங்கற்களை உயர்ந்த பகுதி நோக்கி எடுத்துச் சென்ற போது பள்ளமான பகுதியை நோக்கி பெகோ ஊர்தியானது குடைசாய்ந்ததும் அதனுள் சிக்குண்டு குறித்த நபர் பலியாகியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .