2025 மே 10, சனிக்கிழமை

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மக்களுடன் கலந்துரையாடுகின்றேன்: பாயிஸ்

Super User   / 2013 ஜனவரி 22 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் உயர் பீட கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அந்தக் கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து திருகோணமலை மாவட்ட மக்களுடன்  கலந்துரையாடி வருவதாக தெரிவித்தார்.

எனினும் இந்த கலந்துரையாடல் இன்னும் நிறைவடையவில்லை. அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பல தரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி வருகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களிடம் கலநதுரையாடிய பின்னர் உலமாக்கல் மற்றும் புத்திஜீவிகளுடன் ஆலோசனையை பெற்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளேன் என பாயிஸ் குறிப்பிட்டார்.

'ஆனால், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறுவது என்பதில் உறுதி. எனினும் எந்த கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை' அவர் குறிப்பிட்டார்.

"அமைச்சர் அதாவுல்ல என்னை கௌரவப்படுத்தியுள்ளார். ஆனால், திருகோணமலை மாவட்ட ஆதரவாளர்களை பல தடவை புறக்கணித்துள்ளார். மாகாண அமைச்சர் உதுமாலெப்பைக்கு வழங்கிய கௌரவம் கூட திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்கவில்லை. இதனாலேயே தேசிய காங்கிரஸிலிருந்து வில தீர்மானித்துள்ளேன்"' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • jesmin Tuesday, 22 January 2013 04:43 PM

    இருக்கவே இருக்கிறது சுயனலவாதிகளின் கட்சி. ஒரே பாய்ச்சலில் பாயவேண்டியதுதான்

    Reply : 0       0

    mohamed anas Wednesday, 23 January 2013 04:19 AM

    சும்மா ஒப்புக்கு தன்னை விலம்பரப்படுத இப்படி செய்வது கின்னியா மக்கலிடம் கேட்டால் புரியும் இவரின் நிலை

    Reply : 0       0

    ashrak Thursday, 24 January 2013 08:07 AM

    அரசியலில் இதெல்லம் சஹஜம்மப்பா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X