2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட செயற்குழு கூடி முடிவெடுக்கும்'

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

எதிர்க்கட்சிகள் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திடுவது பற்றி முடிவு எடுக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடி தீர்மானம் எடுக்கும்' என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சும்பந்தன் தெரிவித்தார்.

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடி பத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பம் இடுவது பற்றி ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கும். அதன் பின்னரே எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்திடும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'எதிர்க் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஒன்றை அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம். எதற்கும் கூட்டமைப்பின் செயற்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • m.sountharajan Monday, 11 February 2013 08:20 PM

    தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு செயல் குழு எங்கேயுள்ளது? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அப்படி ஒன்றுமே இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X