2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச மக்களுக்கு மரங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா நகரத்தை பசுமைப் புரட்சியின் கீழ் அழகுபடுத்தும் வேலைத் திட்டத்திற்கமைவாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக கிண்ணியா புஹாரியடி சந்தி 'ரௌன்ட போட்' அழகுபடுத்தும் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பலா, கருங்காலி, திருக்கொண்டல், பஞ்சு, சமுலை, இலுப்பை, புலியை, முதுரை, மஹக்கொனி ஆகிய மரக்கன்றுகள் இன்று மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மியால் இவை மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேசத்தில் காணப்படும் சகல பள்ளிவாயல்களிலும் அறிவித்தல் மூலமாக மக்களை வரவழைத்து இம்மரக்கன்றுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

'இதுபோன்ற மரக்கன்றுகள் தொடர்ந்தும் கிண்ணியாவுக்கு வழங்கபடும். கிண்ணியா நகரத்தை எளில் கொஞ்சும் பசுமையாக்கும் திட்டத்திற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு மிகமிக தேவையாக உள்ளது.

கிண்ணியா பிரதேச வீதியோரங்கள், காணி கனிசமாகவுள்ள பொது இடங்கள், கிராமப்புறங்கள் என சகல பிரதேசத்தையும் பசுமையாக்க இனிவரும் காலங்களில் இவ்வாரான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்' என நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X