2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

குச்சவெளி பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் காட்டு யானைத் தொல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் குச்சவெளி பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.

காட்டு யானைகள் மாலை வேளைகளில் சர்வசாதாரணமாக வீதிகளில் நடமாடுவதாகவும் இதனால் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் முடங்கி வாழ வேண்டியிருப்பதாகவும்  குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர், வடலிக்குளம், சின்னவில்லு, சல்லிமுனை, பல்லவக்குளம் மற்றும் இரணைக்கேணி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளனர்.

வீட்டுத் தோட்டங்கள் மற்றும் வீடுகளில் சேமித்து வைக்கும் நெல் மூடைகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்துவதுடன் உணவாக்கிக் கொள்வதாகவும் மாலையானதும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தாங்கள் இருப்பதாகவும் மக்கள் முறைப்;பட்டுள்ளனர்.

  Comments - 0

  • Ashraff Wednesday, 27 February 2013 05:10 AM

    இவ்வாறான சேவைகளை பொதுமக்களுக்காக செய்வதற்கு மிகவும் நன்றி. மேலும் தொடரவேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .