2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு

Suganthini Ratnam   / 2013 மே 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


திருகோணமலை வலயக் கல்வி அலுவலகப் பிரிவில் அமைந்துள்ள புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள்  இன்று புதன்கிழமை பாடசாலைக்கு விஜயம் செய்தபோதே பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடசாலையை நன்றாக வழி நடத்திய பழைய அதிபரை இடமாற்றம் செய்து, அந்த இடத்திற்கு  புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தேவையற்ற ஒரு செயல் என மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .