2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புனரமைக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களும் அணைக்கட்டுக்களும் மக்களின் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட 2 விவசாய நீர்ப்பாசனக் குளங்களும் 2 அணைக்கட்டுக்களும் நேற்று சனிக்கிழமை பாவனைக்கு விடப்பட்டுள்ளன. 

குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரியகுளம் 13.53 மில்லியன் ரூபா செலவிலும் கல்மிட்டியாவகுளம்  8.4 மில்லியன் ரூபா செலவிலும்   தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரவிப்பாஞ்சான் அணைக்கட்டு 22.2 மில்லியன் ரூபா  செலவிலும் கிளிக்குஞ்சாறு அணைக்கட்டு 7.3 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம, கிழக்கு மாகாண முதலைமச்சர் நஜீப் அப்துல் மஜீத்,  கிழக்கு மாகாண சபையின்  தவிசாளர் ஆரியவதி கலபதி,  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .