2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உலக அஞ்சல் தின நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண  அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் ஏற்பாடு செய்த உலக அஞ்சல் தின நிகழ்வு திருகோணமலையில் ஞாயிற்றக்கிழமை  (17) நடைபெற்றது.

திருகோணமலை அஞ்சல் அலுவலக வளாகத்தில் கொடி ஏறத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்நிகழ்வில், தபால் திணைக்கள பிரதி அஞ்சல்  மாஅதிபர் டி.பி.எல்.ஆர் அபேரத்னா, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
எஸ்.அருள்ராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2011, 2012, 2013ஆம் வருடங்களில் சிறந்த அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்களாக  தெரிவு செய்யப்படடவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில்  தரம்  5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்ற அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் 9 பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .