2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் திருகோணமலை விஜயம்

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார்

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் சந்திரசிறி முத்துக்குமாரன இன்று புதன்கிழமை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.இதன்போது திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்ற அவர், கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் சிறைச்சாலையின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் குறை நிறைகள் தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டார்.

இதேவேளை, யுத்த்தினால் பாதிக்கப்பட்ட சமய ஸ்தலங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்விலும் பிரதி அமைச்சர் கலந்துகொண்டார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 252 பேருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .