2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

உற்பத்தி திறன் விருது விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,எஸ்.கீதபொன்கலன்,எஸ். பாக்கியநாதன்

கிழக்கு மாகாண  சபையினால் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உற்பத்தி திறன் விருது போட்டியில், வெற்றி பெற்ற திணைக்களங்கள், அமைச்சுகள், மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான  விருது வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (05) திருகோணமலை,உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது, கல்வி திணைக்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில் மூதூர் கல்வி வலயமும்,  திணைக்கங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில்  சாய்ந்தமருது சுகாதார அதிகாரி அலுவலகமும்,உள்ளூராட்சி சபைகளுக்கு இடையே  நடத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபையும், அமைச்சுகளுக்கு இடையே  நடத்தப்பட்ட போட்டியில் சுகாதார, விளையாட்டு மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சும் முதலாம் இடத்தை பெற்று விருதுகளை பெற்றுகொண்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீது ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.

மேலும், மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை. விமலதீர திசாநாயக்கா. எம்.மனர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .