2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்வியின் அவசியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: ஹில்மி மஹ்ரூப்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


'கல்வியின் முக்கியத்துவம் புரிந்த எம்மால் என்றைக்கும் வெறுமனே இருந்து விட முடியாது. இஸ்லாம் கூட கல்வி கற்கும் விடயத்தில் அதை அதிகளவு முக்கியத்துவப்படுத்தி இருக்கின்றது. கல்வியை தேடித்தேடி கற்க வேண்டிய அவசியத்தை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்' என் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

நாச்சிக்குடா தி.அல் மதீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அல் மதீனா வித்தியாலய அதிபர் எஸ்.லாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலைக்கு அதிக நாட்கள் வருகை தந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

தரம் 5 ஆம் ஆண்டுவரையிலான மாணவர்களை கொண்ட அல் மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் இறுதியில்  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அபிவிருத்தி சங்க குழுவினருடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .