2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

வதிவிடப் பயிற்சிக் கருத்தரங்கு

Thipaan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம். அப்துல் பரீத்


 'கல்வி நல்லாளுகை' செயல் திட்டத்தின் கீழ்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகள் சங்கத்தின் இயலளவை விருத்தி செய்யும் நோக்கத்தோடு, 'திட்டமிடல் மற்றும் பரிந்துறை' போன்ற தலைப்புக்களில் இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிக் கருத்தரங்கு கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் ஞாயிறு, திங்கட்கிழமைகளில்(14,15)  நடைபெற்றது.

Solidarite Laique பிரான்சிய நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அதன் பங்காளர் நிறுவனங்களான Kinniya Vision  (திருகோணமலை)FEED Sri Lanka  (அம்பாறை) மற்றும் NPDF (மட்டக்களப்பு) ஆகிய நிறுவனங்களினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

பரப்புரை (Advocacy) இணைப்பாளர் ஜனாப் அப்பாஸ் ஹிதாயத்துள்ளாஹ் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் Solidarite Laique  பிரான்சிய நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ஜனாப் ஏ.ஆர்.எம்.சைபுள்ளாஹ், நிதி முகாமையாளர் ஏ.எம்.எம்.அனீஸ், கிண்ணியா விஷன் அமைப்பின் கல்வி நல்லாட்சிக்கான மாவட்ட இணைப்பாளர் எம்.எச்.ஏ.பாயிஸ் மற்றும் மாவட்ட உதவி இணைப்பாளர் எம்.எஸ்.நாஜிர்கான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாண  முன்பள்ளி ஆசிரியைகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கு நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் 'பரிந்துரையின் அவசியம், அமைப்பினுடைய எதிர்காலத் திட்டங்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றினை எதிர்கொள்ளும் விதம்' போன்ற தலைப்புக்களில் இதன் போது கலந்துரையாடப்பட்டன. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .