2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் கைதான மீனவர்களுக்கு பிணை

Thipaan   / 2014 செப்டெம்பர் 20 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, கோணேஸ்வரம் கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களுடன் கைதான 15 மீனவர்களையும், திருகோணமலை பதில் நிதவான் தி.திருச்செந்தில்நாதன்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்தார்.

குறித்த மீனவர்கள் வெள்ளிக்கிழமை(19) கடற்படையினரால் கைது  செய்யப்பட்டதுடன் இவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்படடன.
இவர்கள் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் இம் மீனவர்கள் 15 பேரும் திருகோணமலை பதில் நீதவான் தி.திருச்செந்தில்நாதன் முன்நிலையில் இன்று சனிக்கிழமை  காலை ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

அத்துடன் 2 படகுகளையும் தடுத்து வைக்குமாறு கடற்படையினருக்கும் அப்படகுகளில் உள்ள உபகரணங்கள் பற்றிய அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்காக மீனவர்கள் அனைவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .