2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்


12 அம்சக் கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றத் தொழிலாளர்; சங்கத்தைச் சேர்ந்தவர்கள், கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக திங்கட்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் கிழக்கு மாகாணசபையால்; வழங்கப்பட்ட வீதித் தொழிலாளர் நிரந்தர நியமனத்தில்  தாங்கள் புறக்கணிக்கப்பட்டமை,  உரிய தொழிலாளர்கள் நிரந்த நியமனத்தினுள்  உள்வாங்கப்படவேண்டும்,  வீதி தொழிலாளர் ஆளணிக்காக  சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு அலுவலகங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டமை உள்ளிட்ட  12  அம்சக் கோரிக்கையை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தங்களது  கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸிடம்  தொழிற்சங்கத் தலைவர்  கே.எஸ்.கண்ணன் கையளித்தார்.

இந்த நிலையில், முதலமைச்சரின் செயலாளர் எம்.அசீஸுக்கும் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் அவற்றுக்கான தீர்வு காண்பது எனவும்  புதிய நியமனங்களின்போதே  தொழிலார்களுக்கு முன்னுரிமை வழங்குவது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X