2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சடலத்தை அடையாளங்காண உதவுமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்  

அடையாளங்காணப்படாத நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளங்காண உதவுமாறு வைத்தியசாலை வட்டாரம்கோரியுள்ளது.

இதுதொடர்பில், வைத்தியசாலையின் மருத்துவ பரிசோதனை மேல் அதிகாரி தெரிவிக்கையில்,

'கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கதரஸ்கொட்டுவ என்ற இடத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பலியான இரு இளைஞர்களின் சடலங்களை கந்தளாய் பொலிஸார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இவர்களில் வெலிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது சடலம்; பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரு சடலங்களில் மற்றுமொருவரின் சடலமே இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இச்சடலத்தை யாரும் பொறுப்பேற்க முன்வராததால்  மேற்கொண்டு நடவடிக்கையை எடுப்பதற்கு கந்தளாய் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X