Kogilavani / 2015 மார்ச் 03 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், கிண்ணியா நீதிமன்றத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம்; கோரிக்கை(2) விடுத்துள்ளார்.
அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கிண்ணியாவில் இயங்கி வந்த சுற்றுலா நீதிமன்றம் கடந்த கடந்த யுத்தகாலத்தில் மூடப்பட்டது. நாட்டில் சுமூக நிலை ஏற்பட்டு பல நீதிமன்றங்கள் மீளத் திறக்கப் பட்டபோதும் கிண்ணியா நீதிமன்றம் மீள திறக்கப்படவில்லை.
கிண்ணியா பிரதேச வழக்குகள் திருகோணமலை மற்றும் கந்தளாய் நீதிமன்றங்களிலே பதியப்படுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, இக்குறைபாடுகளை நிவர்த்திக்கும் பொருட்டு கிண்ணியா நீதிமன்றத்தை அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றத்துக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படும் வரை கிண்ணியாவில் உள்ள பொருத்தமான அரச கட்டடமொன்றில் நீதிமன்றம் இயங்க ஒழுங்கு செய்யும் வாய்ப்பு உள்ளது' என இம்ரான் மஹ்ரூப் அமைச்சர் விஜயதாச ராஜபகஷவிடம் சுட்டிக் காட்டினார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago