Thipaan / 2015 மார்ச் 14 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்களும் வெள்ளிக்கிழமை (13) விடுதலை செய்யப்பட்டனர்.
திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் வைத்து கடந்த மாதம் 26ஆம் திகதி 4 படகுளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்த போது நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தையொட்டி கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 86 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அறிவித்தமைக்கிணங்க இம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இதே போன்று 4 படகுகளுடன் 43 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்ப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறும் அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறும் திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் தி.சரவணராஜா, கடற்படையினருக்கு உத்தரவிட்டார்.
விடுவிக்கப்பட்ட 43 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்று அங்கு விடுவிக்கப்பட்ட மற்றை 43 மீனவர்களுடன் இணைத்து மொத்;தமாக 86 பேரையும் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதன் படி திருகோணமலை டொக்யாட் கடற்படைத் தளத்தில் இருந்து 43 இந்திய மீனவர்களும் அவர்கள் தொழில் ஈடுபட்ட 4 இந்திய விசை படகுகளுடன் வெள்ளிக்கிழமை (13) மாலை காங்கசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago