Thipaan / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
ஐந்து வயதுக்கு குறைந்த போஷாக்கு குறைபாடு உள்ள 614 குழந்தைகளுக்கு போஷாக்கு பிஸ்கட்டுக்கள் வழங்கும் திட்டத்தை இம்மாதம் 28ஆம் திகதி முதல் திருகோணமலை ரொட்டறி கழகம் முன்னெடுக்கவுள்ளது.
திருகோணமலை ரொட்டறி கழகம் 2014, 2015ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட, மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கும் செய்தியாளர் சந்திப்பு ரொட்டறி இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடத்தியது.
அதன்போதே மேற்கண்ட திட்டம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
போஷாக்கு குறைபாடுடைய குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு இவ் பிஸ்கட்டுகள் வழங்கப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 18 பின்தங்கிய கிராமங்களில் இருந்து 377 குழந்தைகளும் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 237 குழந்தைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கழகத்தின் தலைவர் திருமதி கார்மன் அன்ரனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்நாள்தலைவர் எந்திரி து.தவசிலிங்கம் கழகத்தின் வரலாறு பற்றியும் பொதுசன தொடர்பாடல் பிரிவின் தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன் கழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளித்தனர்.
இச்சந்திப்பில், ரொட்டறி கழகத்தின் அடுத்த தலைவர் கிறிஸ்டி ஐபோ, இன்ரறக்ட் கழகத்தின் தலைவர் செல்வி தர்சினி ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்கள்.


3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago