Suganthini Ratnam / 2015 மே 13 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இறால்குழி கிராமத்தில்; சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வை தடுக்குமாறு கோரி அக்கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று புதன்கிழமை (13) நடைபெற்றது.
இறால்குழி கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இறால்குழி கிராமத்தை அண்டிய மகாவலி கங்கையில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. இரவு வேளைகளிலேயே அதிகளவில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு படகுகள் மூலமாக திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியோரத்துக்கு மணல் கொண்டுவரப்பட்டு அங்கு பறிக்கப்படுகின்றது. இதன் பின்னர், அங்கிருந்து பார ஊர்திகள் மற்றும் ட்ராக்டர் வண்டிகள் மூலமாக வேறிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. தினமும் 15 க்கும் அதிகமான வாகனங்களில் மணல் கொண்டுசெல்லப்படுகின்றது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அதிகாரிகளுக்கு தெரிவித்தபோதிலும், மணல் அகழ்வை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் அவர்களினால் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அம்மக்கள் கூறினர்.
இந்த மணல் அகழ்வை தடை செய்யுமாறு பிரதேச செயலகத்தினரையும் அரச அதிகாரிகளையும் இந்த மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago