Thipaan / 2015 மே 17 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வரோதயநகர் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் வரோதயநகர் பாரதி வித்தியாலயத்தில் சனிக்கிழமை (16) இடம்பெற்றன.
இந்த தையல் பயிற்சிநெறி கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன்,
கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மிக சிறப்பாக இயங்க வேண்டுமானால் அவற்றில் அதிகமாக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியம்.
திருகோணமலை மாவட்டத்தில் அதிகமான கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளன. இவை புனரமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.அருந்தவராஜா திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago