Kogilavani / 2015 மே 20 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படு கொலையைக் கண்டித்து, திருகோணமலை நிலாவெளி கயிலேஸ்வரா கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதியில், இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள், 'அரசே! குற்றவாளிகளைத் தூக்கிலிடு', 'மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பு வழங்கு', 'காமவெறியர்களே! மாணவர்களைச் சீண்டாதே' போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago