Princiya Dixci / 2015 மே 21 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், வடமலை ராஜ்குமார்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து திருகோணமலையில் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து கவனயீர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இன்று வியாழக்கிழமை (21) முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை நாமகள் வித்தியாலயம், லிங்கநகர் கோணலிங்கம் மகா வித்தியாலயம், திஃபுனித சூசையப்பர் கல்லூரி மற்றும் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாணவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், திருகோணமலை சிவன் கோயிலடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்களும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்.
குற்றவாளிகளுக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமெனக் கேரியே இவர்கள் இந்த கவனயீர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.






1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago