Princiya Dixci / 2015 மே 21 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், பைஷல் இஸ்மாயில்
கிளிவெட்டி நலன்புரி நிலையித்தில் உண்ணாவிரதமிருந்த தேவராசா பிரேம்குமாரையும் பொதுமக்களையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியுடன் இணைந்து புதன்கிழமை (20) மாலை சந்தித்து உரையாடினார்கள்.
இதன் போது முதலமைச்சர், 'சம்பூர் காணிகளில் நீங்கள் விரைவில் குடியமர்த்ப்படுவீர்கள். இந்திய அரசினால் உங்களுக்கு விசேட வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்தித் தரப்படும்' என்று தெரிவித்தார்.
சம்பூர் உயர் பாதுகாப்பு வலயம் பகுதியிலுள்ள காணிகளைப் பெற்றுக்கொண்ட கேற்வே நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை மீளப் பெறக்கோரியும் தம்மை தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுதித்தியும் திங்கட்கிழமை (18) தொடக்கம் சாகும் வரை உண்ணாவிரதத்தை தேவராசா பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார். இப்போராட்டம் புதன்கிழமை (20) மதியத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அங்கு கூடியிருந்த பொதுமக்களுடன் உரையாடுகையில் 'இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவரால் விடுக்கப்பட்ட உத்தரவை இன்னொரு ஜனாதிபதி மாற்றியமைத்தது இதுவே முதல் தடவை' என்றார்.
மேலும், 'சம்பூர் மீள்குடியேற்றம் எந்தவொரு கட்சி சார்ந்ததும் அல்ல. இதுவொரு பொதுப் பிரச்சினை. இதனை அரசியலாக்க முனைய வேண்டாம்' எனவும் கேட்டுக்கொண்டார்.



5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago