Gavitha / 2015 மே 21 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து கிண்ணியவில் ஆர்ப்பாட்டமொன்று வியாழக்கிழமை (21) காலை இடம்பெற்றது.
கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பிரதேச பிரமுகர்கள் உள்ளிட்டோர் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இரக்கமற்ற காமுகர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டாம், குற்றவாளிகளுக்கு மரண தண்டணை கொடு, காமுகர்களை தப்பிக்க விடாதே, எங்கள் சகோதரி வித்தியாவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.


4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago