Princiya Dixci / 2015 ஜூன் 21 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடைபவனி, திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்தின் முன்னாலிருந்து பத்திரகாளி அம்பாள் ஆலயம் வரை நகர வீதிகள் வழியாக இந்த நடைபவனி மேற்கொள்ளப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று, ஜூன் மாதம் 21ஆம் திகதியானது சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago