George / 2015 ஜூன் 23 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, வன்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலயடி கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை காட்டு யானை தாக்கி பலியானதாக வான் எல பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்துல் மனாப் மங்கு (வயது 46) என்பவரே இவ்வாறு பலியானவராவார்.
கூலி விவசாயியான இவர், திங்கட்கிழமை இரவு, யானைக் காவலுக்காக பக்கிரான் வெட்டை என்ற வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, பனிச்சையடி ஆறு என்ற இடத்தில் வைத்து காட்டு யானை அவரைத் தாக்கியதாகவும் அந்த இடத்திலே அவர் உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago